உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மோடி கோயிலில் தினமும் வழிபடும் பக்தன்! | PM Modi | BJP | Trichy Farmer

மோடி கோயிலில் தினமும் வழிபடும் பக்தன்! | PM Modi | BJP | Trichy Farmer

மோடிக்கு கோயில் கட்டிய திருச்சி விவசாயி! திருச்சி மாவட்டம் எரகுடி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சங்கர். துபாயில் வேலை பார்த்த இவர் தற்போது சொந்த ஊரில் விவசாயம் பார்த்து வருகிறார். தேங்காய், மாங்காய், மரவள்ளி, பருத்தி, வெங்காயம் உள்ளிட்டவற்றை பயிரிட்டுள்ளார். பிரதமர் மோடியின் விவசாய திட்டங்களால் சங்கர் பயனடைந்து வந்துள்ளார். இதனால் அவர் மீது ஈடுபாடு கொண்டு 2019ம் ஆண்டு தனது நிலத்தில் 1.25 லட்ச ரூபாய் மதிப்பில் மோடிக்கு கோயில் கட்டினார். இது மோடிக்கு இந்தியாவில் எழுப்பப்பட்ட முதல் கோயில் என்று கூறப்படுகிறது. சங்கர் மோடியின் சிலைக்கு தினமும் பூஜை செய்து வழிபடுகிறார்.

ஜூலை 11, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !