கட்டண விபரத்தை காட்டி மிரட்டும் ஸ்டாலின் pmk|candidate sudha|campign
மயிலாடுதுறை லோக்சபா தொகுதியில், தி.மு.க., கூட்டணி சார்பில், காங்கிரஸ்.வேட்பாளர் சுதா போட்டியிடுகிறார். இவர், கும்மிடிப்பூண்டியை சேர்ந்தவர். இவர் வெற்றி பெற்று எம்.பி.,யாகி விட்டால் அவரை, கும்மிடிப்பூண்டிக்கு பயணம் செய்து தான் வாக்காளர்கள் பார்க்க முடியும் என கிண்டலாக, பா.ம.க., வேட்பாளர் ம.க.ஸ்டாலின் சார்பில் அவரது ஆதரவாளர்கள் கருத்து பதிவிட்டுள்ளனர். அதில், மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளர் சுதாவை சந்திப்பதற்கான வழித்தடங்கள் மற்றும் பஸ், ரயில் கட்டண விபரங்கள் என குறிப்பிட்டுள்ளனர்.
ஏப் 17, 2024