மோடியின் சீன பயணம் டிரம்ப் மிரட்டலுக்கு முடிவு வருமா? PM narendra Modi china visit
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு சீனாவின் தியான்ஜின் நகரில் Tianjin வரும் 31ம் தேதி துவங்கி, 1ம்தேதி வரை நடக்கிறது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் சீனா, ரஷ்யா, இந்தியா, பாகிஸ்தான், ஈரான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், பெலாரஸ் நாடுகள் உள்ளன. ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் ஆசிய நாடுகளை சேர்ந்த 20க்கு மேற்பட்ட தலைவர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பது உறுதியாகியிருக்கிறது. அதற்காக, அவர் 7 ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக சீனாவுக்கு பயணம் மேற்கொள்கிறார். அவர் சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் இரு நாட்டு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்துவார். மோடி- ஜின் பிங் சந்திப்பு மாநாடு துவங்கும் முதல் நாளிலேயே நடக்கிறது. செப்டம்பர் 1ம் தேதி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை பிரதமர் மோடி சந்தித்து பேசுகிறார். ரஷ்யாவுடன் தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்குவதை சுட்டிக் காட்டி, இந்தியா மீது அமெரிக்கா அதிக வரி விதித்துள்ளதால் இந்தியா -அமெரிக்கா இடையிலான உறவு மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.