உலக போராகும் உக்ரைன்-ரஷ்யா போர்? திசை மாறிய டிரோன்களால் திருப்பம் | Poland Russia
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போர் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்கிறது. இரு நாடுகளையும் சமாதானப்படுத்த உலகநாடுகள் மேற்கொண்ட முயற்சி பலனளிக்கவில்லை. கடைசியாக அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசியும் எந்தவித முன்னேற்றமும் இல்லை. நேட்டோ அமைப்பு நாடுகள் கொடுக்கும் ஊக்கத்தால் உக்ரைனும் ரஷ்யா மீதான தாக்குதலை தொடர்கிறது. இதற்கு பதிலடியாக உக்ரைன் மீது டிரோன் உதவியுடன் குண்டு மழை பொழிகிறது ரஷ்யா. இப்படி ஏவப்பட்ட சில டிரோன்கள் உக்ரைனை தாண்டி அண்டை நாடான போலந்துக்குள் ஊடுருவி விட்டன. இதனை கண்டறிந்த போலந்து ராணுவம் அவற்றை உடனடியாக சுட்டு வீழ்த்தியது. போலந்து பாதுகாப்பு படைகளை உச்சக்கட்ட உஷார் நிலையில் இருக்க அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. அத்துமீறி நுழைந்த ரஷ்ய டிரோன்களை நேட்டோ படைகளுடன் இணைந்து போலந்து படைகள் சுட்டு வீழ்த்தி வருகின்றன. இதன் காரணமாக பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் அந்நாட்டு அரசு எச்சரித்துள்ளது. தாக்குதல் குறித்து போலந்து ஆயுதப்படை விளக்கம் அளித்துள்ளது. உக்ரைனில் உள்ள இலக்குகளை ரஷ்யா தாக்கியபோது, நமது வான்வெளியில் ரஷ்ய டிரோன்கள் பல முறை அத்துமீறி நுழைந்தன. அவற்றை அடையாளம் கண்டு சுட்டு வீழ்த்தும் பணி நடைபெற்று வருகிறது. ரஷ்ய டிரோன்களை குறிவைத்து போலந்து ராணுவ நடவடிக்கை தொடர்கிறது.