/ தினமலர் டிவி
/ பொது
/ கரூர் ஓட்டல் அதிபரை ஏமாற்றிய வழக்கில் டிவி நடிகை ராணி, அவரது கணவர் உட்பட மூவர் மீது வழக்கு Police c
கரூர் ஓட்டல் அதிபரை ஏமாற்றிய வழக்கில் டிவி நடிகை ராணி, அவரது கணவர் உட்பட மூவர் மீது வழக்கு Police c
நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் தினேஷ் ராஜ். தொழில் அதிபர். கரூரில் பிரபல ஹோட்டல் நடத்தி வருகிறார். இவருக்கு தொழில் ரீதியாக பணத்தேவை ஏற்பட்டதால், நண்பர்கள் சிலர் மூலமாக சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த பாலாஜியை தொடர்பு கொண்டார். பாலாஜி, கரூரில் உள்ள வடிவேலு என்பவரை தினேஷுக்கு அறிமுகம் செய்தார். வடிவேலு மற்றும் ஆறுமுகமும் சேர்ந்து, தினேஷின் ஹோட்டலை குத்தகைக்கு எடுத்து நடத்த ஏற்பாடு செய்வதாக கூறினர். இதையடுத்து, ஆறுமுகம், வடிவேலு, பாலாஜி ஆகியோர் தினேஷின் ஹோட்டலுக்கு சென்று, அதை குத்தகைக்கு எடுப்பதற்கான ஒப்பந்தம் செய்தனர். அதற்காக ஆறுமுகம் சார்பில் பாலாஜியிடம் 10 லட்சம் ரூபாய் தரப்பட்டது.
டிச 30, 2025