/ தினமலர் டிவி
/ பொது
/ மதுரையில் சம்பவம்: போதை ஆசாமிக்கு லாடம் policeman attacked sword inebriated person drunkard arreste
மதுரையில் சம்பவம்: போதை ஆசாமிக்கு லாடம் policeman attacked sword inebriated person drunkard arreste
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் சென்னை அமைந்தகரை போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக உள்ளார். நேற்று சொந்த ஊருக்கு செல்ல சென்னையில் இருந்து கிளம்பினார். நள்ளிரவில் மதுரை மண்டேலா நகர் சந்திப்பில் காரியாபட்டி பஸ்சுக்காக நின்று கொண்டிருந்தார். அப்போது மதுரை சோளங்குரணி பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் காரில் டீசல் நிரப்பி விட்டு பங்கை விட்டு வெளியே வந்தார். யூடர்னில் திருப்பியபோது பஸ்சுக்காக காத்திருந்த ராஜ்குமார் மீது கார் உரசுவது போல வந்தது. ஆள் நிக்கறது தெரியலையா? பாத்து ஓட்ட மாட்டியா? என போலீஸ்காரர் ராஜ்குமார் சத்தம் போட, போதையில் இருந்த ஆறுமுகத்துக்கு கோபம் வந்தது.
நவ 12, 2024