உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஸ்டாலின் மதுரை பயணத்தில் நடந்த ட்விஸ்ட்: திமுகவுக்கு கூடும் பலம் | DMK Integration | Alagiri

ஸ்டாலின் மதுரை பயணத்தில் நடந்த ட்விஸ்ட்: திமுகவுக்கு கூடும் பலம் | DMK Integration | Alagiri

தி.மு.க.,வில் கருணாநிதி உயிருடன் இருந்தபோது, அவரின் மகன்களான முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி, ஸ்டாலின் இடையே கடும் போட்டி இருந்தது. அனைத்து மாவட்டங்களிலும் இருவருக்கும் ஆதரவாளர்கள் இருந்தனர். ஆனால், மதுரையில் அழகிரி கையே ஓங்கி இருந்தது. கட்சி மற்றும் அரசு பொறுப்புகளில் அழகிரி ஆதரவாளர்களே இருந்தனர். 2014ல் கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக, திமுகவில் இருந்து அழகிரியும், அவரது ஆதரவாளர்களும் நீக்கப்பட்டனர். இதையடுத்து, அழகிரி அரசியலில் இருந்து ஒதுங்கினார். ஆனால் அவரது ஆதரவாளர்கள் வேறு கட்சிக்கு செல்லவில்லை. கடந்த 2021 சட்டசபை தேர்தலுக்கு முன், கட்சியில் தங்களை மீண்டும் சேர்த்துக்கொள்ள வலியுறுத்தி, முன்னாள் அவை தலைவர் இசக்கிமுத்து கடிதம் அளித்தார். இருந்தும் அவர் கட்சியில் சேர்க்கப்படவில்லை. இந்த நிலையில் திண்டுக்கல்லில் நடந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க சில நாட்களுக்கு முன் மதுரை வந்த முதல்வர் ஸ்டாலின், ஹோட்டலில் தங்கினார்.

ஜன 08, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை