பெண் அதிகாரிக்கு டோஸ்: பொன்.குமார் ஆவேசமானது ஏன்? pon kumar scolded woman official dindigul
தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியத் தலைவர் பொன்.குமார் திண்டுக்கல்லில் உள்ள கட்டுமான தொழிலாளர் நல வாரிய அலுவலகத்துக்கு ஆய்வுக்காக வந்தார். தொழிற்சங்க பிரதிநிதிகளிடம் குறைகளை கேட்டார். 2022ம் ஆண்டு ஓய்வூதியம் கேட்டு மனு கொடுத்தேன்; இதுவரை எந்த பதிலும் இல்லை என ஒரு கட்டுமான தொழிலாளி புகார் கூறினார். அதைக் கேட்டதும் பொன்குமார் ஆவேசமானார். மனு கொடுத்து 3 ஆண்டாகியும் பென்ஷன் கொடுக்கவில்லை என்றால் என்ன அர்த்தம்? இதையெல்லாம் கவனிக்க மாட்டீர்களா? என வாரிய அலுவலக ஊழியர்களை சத்தம் போட்டார். அதற்கு விளக்கம் சொல்ல அலுவலக சூப்பிரண்டு வளர்மதி முயன்றபோது, என்னம்மா பேசறீங்க. மூளை இல்லையா? என வாய்க்கு வந்தபடி பொன்குமார் திட்டினார்.