உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கிணறு வெட்ட அணுகுண்டு கிளம்பிய ஆவின் முறைகேடு கதை | Ponnusamy | Aavin Milk Agents' Welfare Associat

கிணறு வெட்ட அணுகுண்டு கிளம்பிய ஆவின் முறைகேடு கதை | Ponnusamy | Aavin Milk Agents' Welfare Associat

ஆவின் பால் கலப்படத்தின் பின்னணியில் மிகப்பெரிய சதி! பகீர் கிளப்பும் பொன்னுசாமி மதுரை கோப்பம்பட்டி மொத்த பால் குளிரூட்டும் மையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட பாலில் தண்ணீர் கலந்து முறைகேடு நடந்தது ஆவின் பால்வள மேம்பாட்டு விரிவாக்க அலுவலர் நடத்திய ஆய்வில் தெரிய வந்தது. அந்த குளிரூட்டும் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்ட நிலையில், பால் கலப்படம் செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காமல், முறைகேட்டை கண்டறிந்த அலுவலர், உசிலம்பட்டிக்கு மாற்றப்பட்டார். மீண்டும் கோப்பம்பட்டி மொத்த பால் குளிரூட்டும் நிலையம் செயல்பட அனுமதி வழங்கப்பட்டதால், பாதிக்கப்பட்ட அலுவலர் வீடியோ வெளியிட்டது சர்ச்சையானது. வீடியோ வெளியிட்ட விரிவாக்க அலுவலர் நேற்றைய தினம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ஆவின் நிர்வாகத்தின் இந்த செயலை தமிழ்நாடு பால் முகவர் தொழிலாளர் நல சங்க தலைவர் பொன்னுசாமி கண்டித்துள்ளார்.

செப் 05, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை