தவிடுபொடியான இலக்குகள்: பிரளய் ஏவுகணை சோதனை வெற்றி | Pralay missile | DRDO
ஒடிசா கடற்கரையில் உள்ள அப்துல் கலாம் தீவில் இருந்து பிரளய் (PRALAY) ஏவுகணை ஏவப்பட்டது. சோதனையின் போது இலக்குகள் துல்லியமாக தாக்கப்பட்டது டிஆர்டிஓ அறிவித்துள்ளது. பிரளயம் என பொருள்படும் பெயர் கொண்ட பிரளய் ஏவுகணை போர் பயன்பாட்டிற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணை ஆகும். இது, இந்திய ராணுவம் மற்றும் விமானப்படையின் செயல்பாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை பல மேம்பட்ட அம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இதுவரை பலமுறை சோதித்து பார்க்கப்பட்டுள்ளது. முதல் சோதனை 2021 டிசம்பர் 22ல் நடந்தது. 400 கிமீ தொலைவில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைந்து துல்லியமாக தாக்கியது. இதற்கு அடுத்து 2021 மற்றும் 2023 இரண்டு முறை சோதித்து பார்க்கப்பட்டது. 2023க்கு பிறகு மீண்டும் தற்போது பிரளய் ஏவுகணை சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதுவரை ராணுவத்துக்கு 250, விமான படைக்கு 120 என 370 ஏவுகணை தயாரிக்க ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வகை ஏவுகணைகல் 150 முதல் 500 கிமீ வரை சென்று துல்லியமாக தாக்கும் திறன் கொண்டது. மணிக்கு 2000 கிலோ மீட்டர் வேகத்தில் செல்ல கூடியது. 10 நிமிடங்களில் தாக்குதலுக்கு தயராகிவிடும். 350 முதல் 700 கிலோகிராம் எடை கொண்டது. எதிரி இலக்குகளை வீரியமாக தாக்கும் சக்தி உடையது. பிரளய் ஏவுகணை சோதனை வெற்றி அடைந்தது பாதுகாப்பு துறைக்கு மிக முக்கிய மைல்கல் என கருதப்படுகிறது.