உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / போலீஸ் மீது உறவினர்கள் சந்தேகம் | Prisoner dies mysteriously | Villupuram sub jail | Villupuram wes

போலீஸ் மீது உறவினர்கள் சந்தேகம் | Prisoner dies mysteriously | Villupuram sub jail | Villupuram wes

விழுப்புரம் ஜீ.ஆர்.பி தெருவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் அற்புதராஜ். வயது 35. 2016ல் டாஸ்மாக் அருகே நடந்த அடிதடி வழக்கில் சேர்க்கப்பட்ட அற்புதராஜ் விசாரணைக்கு வராமல் இருந்துள்ளார். இவருக்கு விழுப்புரம் கோர்ட் பிடிவாரன்ட் பிறப்பித்ததையடுத்து, மேற்கு போலீசார் நேற்று அற்புதராஜை கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, மாலை 5 மணிக்கு விழுப்புரம் கிளை சிறையில் ஒப்படைத்தனர். இன்று காலை காவலர்கள் அற்புதராஜை எழுப்பியபோது அவர் அசைவின்றி இருந்துள்ளார். அதிர்ச்சி அடைந்த சிறை போலீசார், அவரை விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

ஆக 09, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி