வருணை காங்கிரசுக்குள் கொண்டு வர பிரியங்கா திட்டம்! Priyanka | Rahul | Varun | Congress Family Polit
காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பதவி மிகவும் பவர்புல்லானது. ஆனால் பொதுச்செயலாளர் பதவி வகிக்கும் பிரியங்காவுக்கு மட்டும், எந்தவித பொறுப்பும் முறையாக தரப்படாமல் ஓரங்கட்டி வைத்துள்ளனர். என்ன தான் ராகுலும், பிரியங்காவும் அண்ணன் - தங்கையாக இருந்தாலும், அரசியல் என வந்துவிட்டாலே பிரச்னை தான். கட்சியில் எந்த பொறுப்பிலும் இல்லாமல், ஆனால் கட்சியை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ராகுல், பிரியங்காவுக்கு முக்கிய பொறுப்பை கொடுக்க விரும்பவில்லை. இதை தன் தாயார் சோனியாவிடம் கறாராக சொல்லிவிட்டார் ராகுல். இந்நிலையில் கட்சியில் தனக்கு ஏதாவது பொறுப்பு கொடுப்பர் என, எதிர்பார்த்து வெறுத்துப் போய்விட்டார் பிரியங்கா. இதனால் ராகுலின் சித்தப்பா சஞ்சயின் நினைவு தினத்தன்று, ஒரு அதிரடி வேலையை செய்துள்ளார் பிரியங்கா. அன்றைய தினம், சஞ்சயின் மகனான வருணை சென்று சந்தித்து நலம் விசாரித்துள்ளார் பிரியங்கா. வருண் பா.ஜ.வில் இருந்தாலும், கட்சியிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளார். பிலிபித் தொகுதியிலிருந்து, தொடர்ந்து எம்.பி.யாக இருந்த இவருக்கு, 2024 பார்லிமென்ட் தேர்தலில், சீட் மறுக்கப்பட்டது.