SPADEX சாட்டிலைட்டின் முதல் செல்பி வீடியோ மாயாஜாலம் | PSLV-C60 | ISRO | SPADEX chaser selfie video
விண்வெளியில் இந்தியா சார்பில் ஆய்வு மையத்தை அமைக்க வேண்டும் என்பது இஸ்ரோவின் முக்கிய திட்டங்களுள் ஒன்று. இதற்கு தேவையான முதல் கட்ட வேலையை இஸ்ரோ ஏற்கனவே துவங்கி விட்டது. அதன் ஒரு பகுதியாக தான் சமீபத்தில் பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட்டை விண்ணில் ஏவியது. ராக்கெட் சுமந்து சென்ற ஸ்பேடெக்ஸ் ஏ, ஸ்பேடெக்ஸ் பி என்னும் இரண்டு சாட்டிலைட்களும் வெற்றிகரமாக பூமியின் சுற்று வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டன. 2 சாட்டிலைட்களும் குறிப்பிட்ட தூர இடைவெளியில் நிலை நிறுத்தப்பட்டன. இவற்றை வெற்றிகரமாக ஒன்று இணைப்பது இஸ்ரோவின் அடுத்த ஆப்ரேஷன். இந்த நிலையில் விண்வெளியில் இருந்தபடி ஸ்பேடெக்ஸ் ஏ சாட்டிலைட் எடுத்த முதல் செல்பி வீடியோவை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. 400 கிலோ மீட்டருக்கு அப்பால் இருந்தபடி தன்னையும், பின்னணியில் பூமியின் அழகையும் கச்சிதமாக படம் பிடித்து இருக்கிறது ஸ்பேடெக்ஸ். வீடியோவில் பூமியின் ஒரு பகுதி துல்லியமாக தெரிகிறது. கடலும், மேககூட்டங்களும் காட்சி அளிக்கின்றன.