கோவையில் சந்தன மரங்கள் எங்கிருந்தாலும் இறங்கும் கும்பல்: அதிர்ச்சி பின்னணி | Sandalwood smuggling
தமிழக காடுகளில் சந்தன மரங்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. இதனால் சந்தன மரங்களை வீடுகளில் வளர்க்க அரசு அனுமதி அளித்துள்ளது. சந்தன மரத்தை வளர்க்க, அரசு மற்றும் வனத்துறையிடம் முன் அனுமதி பெற வேண்டியதில்லை. ஆனால், மரத்தை வெட்ட தடை உள்ளது. பட்டுப்போன பின், மரத்தை வெட்டலாம். அடிவேர் முதல் அனைத்தையும் வெட்டி எடுத்து, மாவட்ட வனஅதிகாரியின் அனுமதி பெற்று வனத்துறையினர் எடுத்து செல்வார்கள். இதில், 80 சதவீத தொகை, மரம் வளர்ப்பவருக்கு கிடைக்கும்; 20 சதவீதத்தை வனத்துறை எடுத்து கொள்ளும். ஆனால், வீட்டில் வளர்க்கப்படும் சந்தன மரத்தை, வெட்டி விற்பதில் உள்ள சிக்கலால், மக்கள் சந்தன மரம் வளர்ப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை. இப்போதைக்கு அரசு பூங்காக்கள், கட்டடங்கள் உள்ள பகுதிகளில் சந்தன மரம் வளர்க்கப்படுகிறது.