ரூ.3000க்கு டிக்கெட் வாங்கிய ரேவதி குடும்பம் Telugu superstar Allu Arjun Pushpa 2
புஷ்பா2 படம் திரையிடப்பட்ட ஐதராபாத் தியேட்டருக்கு நடிகர் அல்லு அர்ஜுன் திடீரென வந்ததால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி ரேவதி வயது 33 பலியானார். அவரது 9 வயது மகன் தேஜ் கோமாவில் மருத்துவமனையில் உள்ளான். இந்த சம்பவம் பற்றி தெலங்கானா சட்டசபையில் நேற்று காரசாரமாக விவாதிக்கப்பட்டது. அப்போது முதல்வர் ரேவந்த் ரெட்டி பேசியதாவது: சந்தியா தியேட்டரில் புஷ்பா படம் பார்க்க போலீஸ் அனுமதி தராத போதும் அல்லு அர்ஜுன் தியேட்டருக்கு சென்றார். நேரடியாக தியேட்டருக்கு போய் படம் பார்த்திருந்தால் பிரச்னை வந்திருக்காது. தியேட்டருக்கு செல்லும் வழியில் காரின் ரூப் டாப்பை திறந்து ரோட் ஷோ செய்தார். இதனால் பக்கத்தில் உள்ள எல்லா தியேட்டர்களில் இருந்தும் ரசிகர்கள் ஒரே நேரத்தில் சந்தியா தியேட்டரை நோக்கி ஓடிவந்ததால் திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் ரேவதி உயிரிழந்தார். மகன் கோமா நிலைக்குச் சென்றான்.