மெட்ராஸ் ரேஸ் கிளப் அலட்சியத்தால் நடவடிக்கை | ₹ 822 crore outstanding | seal for the racecourse
ஊட்டியில் வருவாய் துறைக்கு சொந்தமான நிலத்தில் கடந்த 120 ஆண்டுகலாக மெட்ராஸ் ரேஸ் கிளப் குத்தகைக்கு எடுத்து குதிரை பந்தயங்களை நடத்தி வந்தது. அரசுக்கு செலுத்த வேண்டிய குத்தகை தொகையை கடந்த 1978 முதல் மெட்ராஸ் ரேஸ் கிளப் நிர்வாகம் செலுத்தாமல் இழுத்தடித்து வந்தது. இப்போது வரை 822 கோடி ரூபாய் குத்தகை தொகை நிலுவையில் உள்ளது. இதுதொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நடந்தது. கோர்ட் உத்தரவுப்படி ஜூன் 21ம் தேதி மெட்ராஸ் ரேஸ் கிளப்புக்கு வருவாய் துறையினர் நோட்டீஸ் அனுப்பினர். அதற்கு கிளப் நிர்வாகம் பதில் அளிக்காமல் கிடப்பில் போட்டது. இன்று காலை RDO மகாராஜ் தலைமையில் சென்ற வருவாய் அலுவலர்கள் போலீஸ் உதவியுடன் நிலத்தினை மீட்டு அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். குதிரை பந்தயம் மைதானத்திற்குள் உள்ள அலுவலகக் கட்டடங்கள், நிர்வாக கட்டடங்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.