/ தினமலர் டிவி 
                            
  
                            /  பொது 
                            / பீகார் தேர்தலில் முறைகேடு நடக்கும் என பேசிய ராகுலுக்கு கண்டனம்  Rahul | ECI Slams Rahul on malpracti                                        
                                     பீகார் தேர்தலில் முறைகேடு நடக்கும் என பேசிய ராகுலுக்கு கண்டனம் Rahul | ECI Slams Rahul on malpracti
கடந்த ஆண்டு நடந்த மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தலில், பாஜ - சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது. தோல்வியடைந்த காங்கிரஸ் மாபெரும் முறைகேடு நடந்ததாக குற்றம் சாட்டியது. வாக்காளர் பட்டியலில் உள்ள எண்ணிக்கைக்கும், பதிவான ஓட்டுகளுக்கும் இடையே பெரிய வித்தியாசம் இருப்பதாக லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் குற்றம்சாட்டினார். இதையடுத்து, காங்கிரசின் குற்றச்சாட்டுக்கு தேர்தல் கமிஷன் விளக்கம் அளித்தது. அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், தேர்தல் நடைமுறை, வாக்காளர் பட்டியல், பதிவான ஓட்டுகள் பற்றி தெளிவான விளக்கம் அளிக்கப்பட்டது.
 ஜூன் 07, 2025