ரயிலில் ஆடிட்டர் தவறவிட்ட நகைகளை திருடிய ஊழியர் Railway employee arrested jewel theft woman passeng
கும்பகோணத்தை அடுத்த சுவாமிமலை பகுதியை சோந்தவர் ஸ்ரீகாந்த். சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி சரஸ்வதி (வயது 59). அக்கவுன்டன்ட். சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனங்களுக்கு ஆடிட்டிங் பார்க்கும் வேலை பார்க்கிறார். சரஸ்வதி நேற்று முன்தினம் குடும்பத்தினருடன் சென்னையில் இருந்து கும்பகோணத்துக்கு உழவன் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏசி பெட்டியில் வந்தார். தனது 13 சவரன் நகைகளை மணிபர்சில் கழற்றி வைத்தார். அதனை மற்றொரு பையின் உள்ளே வைத்து விட்டு தூங்கியுள்ளார். அதிகாலையில் ரயில் கும்பகோணத்துக்கு வந்ததும் சரஸ்வதியும் குடும்பத்தினரும் அவசர அவசரமாக இறங்கினர். ரயில் புறப்பட்டு சென்ற பிறகு உடமைகளை சரிபார்த்த சரஸ்வதி, நகை பர்ஸ் இருந்த பையை இருக்கையிலேயே மறந்து வைத்துவிட்டு இறங்கியதை உணர்ந்தார். அதிர்ச்சி அடைந்த சரஸ்வதி கும்பகோணம் ரயில் நிலையத்தில் இருந்த ரயில்வே போலீசாரிடம் விஷயத்தை சொன்னார். அவர்கள் உடனே பாபநாசம் ரயில் நிலையத்தில் பணியில் இருந்த ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். கும்பகோணத்துக்கும் பாபநாசத்துக்கும் இடைப்பட்ட தூரம் 14 கிலோ மீட்டர். 9 நிமிடங்களில் போய் சேர்ந்து விடும். அடுத்த 10வது நிமிடத்தில் பாபநாசம் நிலையத்தை ரயில் அடைந்ததும் ரயில்வே போலீசார் ஏசி பெட்டியில் ஏறி பார்த்தனர். அங்கு சரஸ்வதி தவறவிட்ட பை இருந்தது. அதனுள் இருந்த பர்ஸ் காணவில்லை.