சென்னை, கோவையில் குறைந்த மழை அளவு | Rain | IMD | Rain update | Monsoon | Weather
வடகிழக்கு பருவமழை காலத்தில் இயல்பான நிலையில் 398.3 மிமீ மழை பெய்ய வேண்டும். அக்டோபர் 1 முதல் டிசம்பர் 11 வரை 420.9 மிமீ மழை பெய்துள்ளது. தமிழகத்தில் இயல்பை விட 6 சதவீதம் அதிகம் பெய்துள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இயல்பை விட 2% குறைவாக பெய்துள்ளது. சென்னையில் இயல்பான நிலையில் 731.9 மிமீ மழை பெய்யும். இன்று வரை 715.1 மிமீ மழை மட்டுமே பெய்துள்ளது. மதுரையில் இயல்பான மழை அளவு 337.7மிமீ , பதிவான மழை 350.5மிமீ. இது 4 சதவீதம் அதிகம். கோவையில் இயல்பான மழை அளவு 315.1மிமீ , பதிவான மழை 280.4மிமீ, 11 சதவீதம் குறைவு. சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இப்போதைய அறிக்கையின் படி, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகள் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழகத்தில் 17ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதிகாலையில் பனிமூட்டம் நிலவும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.