4 நாள் சிகிச்சைக்கு பின் வீட்டில் ஓய்வெடுக்கும் ரஜினி | Actor Rajinikanth | Discharged from hospital
நடிகர் ரஜினிகாந்த் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 30-ந் தேதி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு வயிற்று பகுதியில் உள்ள ரத்த நாளத்தில் வீக்கம் இருந்தது தெரிந்தது. இதையடுத்து டாக்டர்கள் குழுவினர் ரத்த நாளத்தில் உள்ள வீக்கத்தை சரிசெய்யும் வகையில் ஸ்டென்ட் பொருத்தினர். ஸ்டென்ட் பொருத்தப்பட்ட பிறகு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ரஜினிகாந்த், சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். தொடர்ந்து மருத்துவக்குழு அவரை கண்கானித்து வந்தது. பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர் ரஜினிகாந்தின் உடல்நலம் குறித்து விசாரித்தனர். பூரண குணடைந்த ரஜினிகாந்த், மனைவி லதா மற்றும் உறவினர்கள், டாக்டர்களுடன் வழக்கம்போல பேசினார். தனது வழக்கமான பணிகளை அவரே மேற்கொள்வதாகவும், வீடு திரும்புவதற்கான உடல் தகுதியுடன் அவா் இருப்பதாகவும் மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இன்று அதிகாலை மருத்துவமனையில் இருந்து ரஜினிகாந்த் தனது வீட்டுக்குத் திரும்பினார். ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டாலும், டாக்டர்கள் ஆலோசனைகளின்படி சில வாரங்கள் அவர் தனது இல்லத்திலேயே ஓய்வு எடுப்பார் என்று கூறப்படுகிறது.