இனி ஆண்டுக்கு 100 பிரம்மோஸ் ஏவுகணைகள் தயார்! | Rajnath Singh | BrahMos Missile production | Lucknow
உபி.,யில் திறக்கப்பட பிரம்மோஸ் உற்பத்தி மையம் சிறப்புகள் என்னென்ன? உ.பி., லக்னோவில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மோஸ் ஏவுகணை உற்பத்தி மையத்தை ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று வீடியோ கான்பிரன்ஸ் மூலம் திறந்து வைத்தார். 2021ல் அடிக்கல் நாட்டப்பட்ட இந்த ஆலை 1,600 ஹெக்டேர் நிலப்பரப்பில் 300 கோடி செலவில் கட்டப்பட்டு உள்ளது. இங்கு ஆண்டுக்கு 100 ஏவுகணைகளை தயார் செய்ய முடியும். உற்பத்தி மற்றும் சோதனை செய்யவும் முடியும். நம் ராணுவத்தின் முப்டைகளிலும் பிரம்மோஸ் செயல்பாட்டில் உள்ளது. போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிகள், போர் விமானங்கள் மற்றும் நிலத்தில் இருந்து ஏவ முடியும் என்பதால் இந்த ஏவுகணையை பயன்படுத்தி பலமுனை தாக்குதல் நடத்த முடியும். அதிவேக பிரம்மோஸ் ஏவுகணை 290 முதல் 400 கி.மீ. தொலைவுக்கு சென்று எதிரி இலக்கை தாக்கும் திறன் பெற்றது. அதிகபட்சமாக 650 கி.மீ வரை சென்று தாக்கும் . இந்தியா மற்றும் ரஷ்யாவின் கூட்டு தயாரிப்பு தான் பிரம்மோஸ். இந்தியாவில் உள்ள பிரம்மபுத்திரா, ரஷ்யாவின் மஸ்க்வா நதிகளின் பெயர்களை இணைத்து பிரம்மோஸ் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்தியா பயன்படுத்தி வரும் இந்த ஏவுகணைகளை பிலிப்பைன்ஸ், பிரேசில், வியட்நாம், இந்தோனேசியா கொள்முதல் செய்வதற்கு ஒப்பந்தங்கள் செய்துள்ளன. புரூனே, சிலி, எகிப்து, மலேசியா, ஓமன், தென் ஆப்பிரிக்கா ஏவுகணையை வாங்குவதற்கு ஆர்வம் காட்டி உள்ளன. இதனால் தான் கூடுதலாக உற்பத்தி செய்வதற்கான முயற்சிகளில் இந்தியா ஈடுபட்டுள்ளது.