உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / டெல்லி குண்டு வெடிப்பு: பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பரபரப்பு பேச்சு | Rajnath Singh|Delhi Blast

டெல்லி குண்டு வெடிப்பு: பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பரபரப்பு பேச்சு | Rajnath Singh|Delhi Blast

டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டுவெடிப்புச் சம்பவம் குறித்து மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆவேசமாகப் பேசியுள்ளார். துயர சம்பவத்தில் உயிர்களை இழந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் துயரமான நேரத்தில் உறவுகளை இழந்த குடும்பங்களுக்கு இறைவன் பலம் அளிக்கப் பிரார்த்திக்கிறேன். நாட்டின் முன்னணி புலனாய்வு அமைப்புகள் இந்த சம்பவம் குறித்து முழுமையான விசாரணையை நடத்தி வருகின்றன. இந்த விசாரணையின் முடிவுகள் விரைவில் பொதுமக்களுக்கு வெளியிடப்படும். இந்தத் துயரத்துக்குக் காரணமானவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள். எந்தச் சூழ்நிலையிலும் அவர்கள் தப்ப விடப்பட மாட்டார்கள் என நாட்டு மக்களுக்கு உறுதியாகக் கூற விரும்புகிறேன். அனைத்து குடிமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதே எங்கள் முதன்மையான கடமை என ராஜ்நாத் சிங் கூறினார்.

நவ 11, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி