உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்கட்சிகள் ஆதரவு | All-party meeting | Rajnath Singh

மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்கட்சிகள் ஆதரவு | All-party meeting | Rajnath Singh

2443 பாக் மீது எந்த நேரத்திலும் பதிலடி? நாங்க மத்திய அரசு பக்கம் நிற்கிறோம்! காங், திமுக முதல் ஓவைசி வரை ஆதரவு டிஸ்க்: மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்கட்சிகள் ஆதரவு | All-party meeting | Rajnath Singh காஷ்மீரில் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் இறந்தனர். நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ள இச்சம்பவம் தொடர்பாக, விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்தது. ராஜ்யசபா அல்லது லோக்சபாவில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட எம்.பி.,க்களை கொண்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. டில்லியில் நடந்த இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா, ஜெய்சங்கர், ஜேபி நட்டா நிர்மலா சீதாராமன் ஆகியோர் பங்கேற்றனர். காங்கிரஸ் தலைவர் கார்கே, ராகுல், திமுக எம்.பி., திருச்சி சிவா, சமாஜ்வாதி, திரிணமுல், தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர். கூட்டம் துவங்கியம், தாக்குதலில் உயிர் இழந்தவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. Breath ராஜ்நாத் சிங் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் அமித்ஷா கலந்து கொண்டனர். பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு அனைத்து கட்சிகளும் கண்டனம் தெரிவித்தன. அனைத்து கட்சி கூட்டத்தின் போது காஷ்மீர் தாக்குதல் மற்றும் அரசு எடுத்த நடவடிக்கை மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது. breath கூட்டத்தை தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் கார்கே பேசினார். காஷ்மீரில் அமைதி நிலவ அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும் என நாங்கள் வலியுறுத்தினோம். பிரதமர் எடுக்கும் முடிவே இறுதியானது என்பதால், இன்று நடந்த முக்கியமான இந்த கூட்டத்தில் அவர் பங்கேற்று இருக்க வேண்டும். மூன்று அடுக்கு பாதுகாப்பு இருந்தும் பாதுகாப்பு குளறுபடி ஏற்பட்டது எப்படி? பாதுகாப்பு குறைபாடு உள்ளது. பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. நாட்டின் நலனுக்காக மத்திய அரசு எடுக்கும் முடிவுக்கு ஆதரவு அளிப்போம். இந்த தாக்குதல் சம்பவம் கண்டனத்திற்கு உரியது. நாடு ஒற்றுமையாக உள்ளது என்ற செய்தியை நாட்டு மக்களுக்கு தெரிவிக்க விரும்புகிறோம் என்றார். பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு அனைவரும் கண்டனம் தெரிவித்தோம். அரசு எடுக்கும் எந்த நடவடிக்கைக்கும் எதிர்க்கட்சிகள் முழு ஆதரவு அளிக்கும் என காங்கிரஸ் எம்பி ராகுல் கூறினார். பயங்கரவாத நடவடிக்கைகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். இனியும் பயங்கரவாதம் தொடர அனுமதிக்கக்கூடாது. அதனை தடுக்க மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிப்போம் என திமுக எம்பி சிவா உறுதி அளித்தார். பஹல்காம் தாக்குதலில் மத்திய அரசு எடுக்கும் முடிவை ஆதரிப்போம். பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் தரும் நாட்டின் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க முடியும். வான், கடல் வழி தற்காப்பு தடுப்பு நடவடிக்கை எடுக்க சர்வதேச சட்டம் அனுமதிக்கிறது என எம்.பி. அசாதுதீன் ஓவைசி கருத்து தெரிவித்தார்.

ஏப் 24, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !