ராமநாதசுவாமி கோயிலில் மழைநீர் புகுந்ததால் அவதி Rameshwaram heavy rain | Temple
ராமேஸ்வரத்தில் கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்தி வந்தது. இன்று காலை 10 மணியளவில் திடீரென மேகம் சூழ்ந்து மழைபெய்யத் துவங்கியது. நேரம் செல்ல செல்ல மழை தீவிரமானது. கிட்டத்தட்ட 2 மணி நேரத்துக்குமேலாக மழை வெளுத்தது. ராமேஸ்வரத்தின் பல பகுதிகளில் மழைநீர்தேங்கி நின்றது. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்குள்ளும் மழைநீர் புகுந்தது. அம்மன் சன்னதி முன் மழை நீர் தேங்கியுள்ளது. கோயிலுக்கு வந்த பக்தர்கள் மழைநீரில் நடந்து சென்று சாமி தரிசனம் செய்தனர். மழை நீர் கோயிலுக்குள் புகுந்ததால் பக்தர்கள் சிரமப்பட்டனர். கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகள் முறையாக செய்யப்படவில்லை. இதனால் அப்பகுதிகளில் தேங்கும் நீர் கோயிலுக்குள் வந்து பெரும் சிரமத்தை கொடுப்பதாக பக்தர்கள் கூறினர். கோயிலில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.