உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஹமாஸ் ஆதரவால் இந்திய மாணவிக்கு அதிர்ச்சி-ஷாக் வீடியோ Ranjani Srinivasan | self deport | US | Hamas

ஹமாஸ் ஆதரவால் இந்திய மாணவிக்கு அதிர்ச்சி-ஷாக் வீடியோ Ranjani Srinivasan | self deport | US | Hamas

அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியவர்களை அதிபர் டிரம்ப் நிர்வாகம் அதிரடியாக வெளியேற்றி வருகிறது. கை, கால்களை சங்கிலியால் கட்டி, அவரவர் நாட்டுக்கே அமெரிக்க ராணுவ விமானம் கொண்டு சென்று விடுகிறது. இந்த அதிரடி நடவடிக்கைக்கு ஊடே அமெரிக்காவில் பிஎச்டி படிக்கும் இந்திய மாணவி ஒருவர் தன்னைத்தானே நாடு கடத்திக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தில் பயங்கரவாத பின்னணி இருப்பது இன்னும் அதிர்ச்சி. அந்த மாணவி பெயர் ரஞ்சனி சீனிவாசன். எப்-1 மாணவர் விசாவில் அமெரிக்கா சென்றிருந்தார். நியூயார்க் நகரில் உள்ள கொலம்பியா பல்கலையில் பிஎச்டி படித்து வந்தார். இஸ்ரேல்-ஹமாஸ் போரில் பாலஸ்தீனுக்கு ஆதரவாக நடந்த போராட்டத்தில் ரஞ்சனி பங்கேற்றார். அவரை ஹமாஸ் ஆதரவாளர் என்று அமெரிக்கா பகிரங்கமாக குற்றம் சாட்டியது.

மார் 15, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !