உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / விரைகிறது மீட்புபடை: ராணுவத்தின் உதவி நாடுகிறது அசாம் | Rat Hole | Mine In Assam

விரைகிறது மீட்புபடை: ராணுவத்தின் உதவி நாடுகிறது அசாம் | Rat Hole | Mine In Assam

அசாம் மாநிலம் உம்ரங்சோ பகுதியில் நிலக்கரி சுரங்கம் உள்ளது. 300 அடி ஆழம் கொண்ட இந்த சுரங்கத்தில் சட்டவிரோதமாக நிலக்கரி எடுக்கப்படுகிறது. குறிப்பாக எலி வளை எனப்படும் தடை செய்யப்பட்ட முறையை பயன்படுத்தி இங்கு நிலக்கரி எடுக்கின்றனர். சுமார் 15க்கும் மேற்பட்டவர்கள் நிலக்கரி எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது திடீரென சுரங்கத்தின் உள்ளே தண்ணீர் புகுந்துள்ளது. நிலக்கரி எடுக்க உள்ளே சென்றவர்கள் வெளியே தப்பி வர முடியாத அளவுக்கு பாதை முழுவதுமாக மூடி இருக்கிறது. 20க்கும் மேற்பட்டவர்கள் உள்ளே சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. 300 அடி ஆழம் கொண்ட சுரங்கத்தில் 100 அடிக்கு தண்ணீர் சூழ்ந்துள்ளது. மீட்பு படையினர் மோட்டார் பம்புகளை வைத்து தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர். மாநில பேரிடர் மீட்புப் படை மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். ராணுவத்தின் உதவி கேட்கப்பட்டுள்ளது என அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

ஜன 06, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை