உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சாமானியர்களுக்காக நானோ கார் தயாரித்த ரத்தன் டாடா | Rathan tata | tata group|

சாமானியர்களுக்காக நானோ கார் தயாரித்த ரத்தன் டாடா | Rathan tata | tata group|

ரத்தன் டாடா காலமானார் இந்திய தொழில் துறையின் அடையாளமாக திகழ்ந்தவர்! டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா காலமானார். அவருக்கு வயது 86. வயது மூப்பு உடல்நலக்குறைவு காரணமாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டு இருந்தார். ரத்த அழுத்தம் அடிக்கடி அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்ததால் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் உடல்நிலை மேலும் மோசனது. நேற்றிரவு சிகிச்சை பலனின்றி ரத்தன் டாடா இறந்தார். ரத்தன் டாடா மறைவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் மற்றும் அரசியல் தலைவர்கள் தொழிலதிபர்கள் உட்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். டாடா நிறுவனத்தை தொடங்கிய ஜாம்ஜெட்சி டாடாவின் கொள்ளு பேரன் ரத்தன் டாடா. 1948ல் பெற்றோர் பிரிந்து விட, பாட்டி அரவணைப்பில் வளர்ந்தார். 1959ல் அமெரிக்காவில் படிப்பு முடித்ததும், IBM நிறுவனத்தில் வேலை கிடைத்தது. ஆனால் தாய்நாட்டுக்காக பணியாற்ற வேண்டும் என நாடு திரும்பினார். டாடா குழுமத்தில் பணியில் சேர்ந்தார். சொந்த நிறுவனம் என்றாலும் துவக்கத்தில் சிறிய பொறுப்புகளையே ஏற்றார். 1961ல் டாடா ஸ்டீல் நிறுவனத்தில் உதவியாளராக பணியாற்றினார். அதுவே அவரை பெரிய தொழிலதிபராக மாற்றியது. 1970ல் TCS நிறுவனத்தில் நுழைந்தார். படிப்படியாக உயர்ந்து டாடா நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உதவினார். 1986- முதல் 1989 வரை ஏர் இந்தியா விமான நிறுவன தலைவராக பணியாற்றினார். 1991ல் டாடா குழுமத்தின் தலைவராக, அப்போதைய தலைவர் ஜே.ஆர்.டி. டாடாவால் நியமிக்கப்பட்டார்.

அக் 10, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ