கூட்டத்தை சமாளிக்க முடியல: துணை முதல்வர் மன்னிப்பு RCB| bengaluru stampede| dk sivakumar|
ஐபிஎல் போட்டியில் முதல் முறையாக கோப்பை வென்ற பெங்களூரு அணியின் வெற்றி கொண்டாட்டம் பெங்களூருவில் நடந்தது. சின்னசாமி ஸ்டேடியம் அருகே கட்டுக்கடங்காத கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் இறந்தனர். இறந்தவர்கள் குடும்பங்களுக்கு துணை முதல்வர் சிவக்குமார் இரங்கல் தெரிவித்தார். வெற்றி கொண்டாட்டத்தை காண இருந்த மக்களின் சோக மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக அவர் கூறினார். உயிரை விட பெருமை பெரியது இல்லை எனக்கூறினார். கூட்ட நெரிசலில் சிக்கி பாதிக்கப்பட்டவர்கள் அட்மிட் ஆகியுள்ள மருத்துவமனைக்கு கர்நாடகா பாஜ தலைவர் விஜயேந்திரா சென்று ஆறுதல் கூறினார். பின் பேசிய அவர், இந்த துயர சம்பவத்துக்கு கர்நாடக அரசு முழு பொறுப்பு ஏற்க வேண்டும். மாநில அரசு எந்த முன் ஏற்பாடுகளும் செய்யாமல், வெற்றிப்பேரணி நடத்த அவசரப்பட்டதுதான் இந்த துயர சம்பவத்துக்கு வழிவகுத்தது. பாதுகாப்பு முன் ஏற்பாடுகள் பற்றி கர்நாடகா அரசு கவலைப்பட்டது இல்லை. அவர்களுக்கு வேண்டியது எல்லாம் பப்ளிசிட்டிதான். இதன் விளைவாக 11 பேரின் உயிர் போனது. இது தொடர்பாக நீதி விசாரணை நடத்த முதல்வர் உத்தரவிட வேண்டும் என விஜயேந்திரா வலியுறுத்தினார்.