உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நெரிசலில் நசுங்கி இறந்த 11 பேர் விளக்கம் அளிக்க அரசுக்கு உத்தரவு RCB Stampeded Case

நெரிசலில் நசுங்கி இறந்த 11 பேர் விளக்கம் அளிக்க அரசுக்கு உத்தரவு RCB Stampeded Case

ஐபிஎல் தொடரில் ஆர்.சி.பி அணி கோப்பை வென்றது. பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று ஆர்சிபி அணி வெற்றி கொண்டாட்டம் நடந்தது. ஸ்டேடியத்தில் 35 ஆயிரம் பேர் மட்டுமே அமர முடியும் என்ற நிலையில், ஏறக்குறைய 3 லட்சம் பேர் அங்கு திரண்டனர். ஸ்டேடியம் வெளியே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 11 பேர் பலியாகினர். இச்சம்பவம் தொடர்பாக, கர்நாடகா ஐகோர்ட் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. பொறுப்பு தலைமை நீதிபதி காமேஷ்வர ராவ், நீதிபதி சி.எம். ஜோஷி அமர்வு முன் அட்வகேட் ஜெனரல் சசிகிரண் ஷெட்டி ஆஜராகி அரசு தரப்பில் விளக்கம் அளித்தார். ஸ்டேடியத்தில் 35,000 நபர்கள் மட்டுமே அமர இடம் உள்ளது. ஆனால், 2.5 லட்சம் முதல் 3 லட்சம் பேர் திரண்டனர். ஸ்டேடியத்திற்கு உள்ளேயும் ரசிகர்கள் இருந்தனர். ஒரே நேரத்தில் அதிப்படியான ரசிகர்கள் குவிந்ததால், நெரிசலை சமாளிக்க முடியவில்லை. குயின்ஸ் ரோடு பகுதியில் 4 பேர், கேட் எண் 6ல் 3 பேர், கேட் எண் 7ல் 4 பேர் மரணம் அடைந்தனர். போலீஸ் கமிஷனர் உட்பட மொத்தம் 1,483 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். நடந்த சம்பவத்திற்கு அரசு மிகவும் வருந்துகிறது. முதல் நபராக முதல்வர் சித்தராமையா இரங்கல் தெரிவித்ததுடன், இறந்தோர் குடும்பத்திற்கு இழப்பீடு அறிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் கோர்ட் உத்தரவுக்கு கட்டுப்பட்டு நடக்க, ஆலோசனையை பின்பற்றவும் அரசு தயாராக உள்ளது என அட்வகேட் ஜெனரல் கூறினார். விளையாட்டு போட்டியின் வெற்றிக் கொண்டாட்டம் விபரீதத்தில் முடிந்துள்ளதாக கூறிய நீதிபதிகள், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? என்று கேட்டனர். சம்பவம் பற்றியும், அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்தும் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை 10ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

ஜூன் 05, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ