11 பேரை காவு வாங்கிய துயரம்: ஆர்சிபி வீரர் இரங்கல் | Bengaluru stampede | RCB victory | Krunal pandy
18 ஆண்டுகால பிரீமியர் லீக் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக இந்த ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பையை வென்றது. இந்த வெற்றியை கொண்டாட பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் எதிர்பாராத கூட்ட நெரிசல் ஏற்பட்டு 11 பேர் இறந்தனர். அதில் தமிழகத்தை சேர்ந்த ஐடி பெண் ஊழியரும் ஒருவர். மேலும் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் ஒட்டு மொத்தை நாட்டையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. போதிய முன்னேற்பாடுகள் இல்லாமல் வெற்றி கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்ததே இந்த துயரத்துக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி உட்பட அனைத்து தலைவர்களும் இரங்கல் தெரிவித்தனர். துரதிர்ஷ்டவசமாக நடந்த சம்பவத்தால் மிகுந்த வேதனை அடைந்ததாக ஆசிபி அணி தரப்பிலும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.