உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கூலிப்படையை வைத்து தீர்த்துகட்டியவரை தேடும் போலீஸ் | Retired Police sub inspector Hacked to Death

கூலிப்படையை வைத்து தீர்த்துகட்டியவரை தேடும் போலீஸ் | Retired Police sub inspector Hacked to Death

தொழுகைக்கு சென்றுவிட்டு திரும்பியவரை வெட்டிய கும்பல்! நெல்லை நகரில் நடந்த பதைபதைப்பு சம்பவம் திருநெல்வேலியை சேர்ந்தவர் ஜாகிர் உசேன் பிஜிலி. ஓய்வு பெற்ற எஸ்ஐ. நகரில் உள்ள முர்த்திம் ஜர்கான் தைக்காவில் முத்தவல்லி(அறங்காவலர்) ஆக இருந்தார். ரமலான் நோன்பு காலம் என்பதால் இன்று காலை தொழுகைக்காக பள்ளிவாசலுக்கு சென்றுவிட்டு டூ வீலரில் வீட்டுக்கு திரும்பி கொண்டு இருந்தார். காட்சி மண்டபம் அருகே வந்தபோது, 4 பேர் அவரை வழி மறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடி உள்ளனர். ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே ஜாகிர் இறந்தார். குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி, அவரது உடலை எடுக்கவிடாமல் போலீசிடம் உறவினர்கள் வாக்குவாதம் செய்தனர். இடத்தகராறு காரணமாக ஏற்கனவே ஜாகிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என அவர்கள் குற்றம்சாட்டினர். குற்றவாளிகளை உடனே கைது செய்வதாக போலீசார் உறுதி அளித்து அவர்களை சமாதானப்படுத்தினர். போலீசார் விசாரணையில் இடப்பிரச்னை காரணமாக இந்த கொலை நடந்தது தெரியவந்துள்ளது. பள்ளிவாசல் அருகே 36 சென்ட் நிலம் உள்ளது. இது நூர்ஜஹான் என்பவருக்கு சொந்தமானதாக கூறப்படுகிறது. இந்த நிலத்தை சொந்தம் கொண்டாடுவதில் ஜாகீருக்கும் நூர்ஜஹானின் கணவர் தவ்ஹீத்துக்கும் இடையே தகராறு இருந்து வந்துள்ளது. ஏற்கனவே தவ்ஹீத் அளித்த புகாரில் ஜாகீர் சிறைக்கும் சென்று வந்துள்ளார். இச்சூழலில் முன்பகை காரணமாக தவ்ஹீத் கூலி ஆட்களை வைத்து ஜாகீரை கொலை செய்ததாக கூறப்படுகிறது. தவ்ஹீத் உட்பட 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

மார் 18, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை