தேனியில் சம்பவம்: சோகத்தில் மூழ்கிய கிராமம் | Road accident | 3 students | Thevaram police
விநாயகர் சிலையை கரைத்த 3 மாணவர்களுக்கு நேர்ந்த சோகம் டிஸ்க்: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆங்காங்கே வைத்து வழிபட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் மக்கள் கரைத்து வருகின்றனர். தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள மறவப்பட்டியில் இருந்து விநாயகர் சிலை ஊர்வலம் துவங்கியது. அலங்காரம் செய்யப்பட்ட விநாயகர் சிலையை டிராக்டரில் கொண்டு சென்று சிந்தலைசேரியில் உள்ள நீர்நிலையில் இரவு 10 மணியளவில் கரைத்தனர். 11 மணியளவில் ஊருக்கு டிராக்டரில் புறப்பட்டனர். டிராக்டரை விநாயகமூர்த்தி என்பவர் ஓட்டினார். இருட்டில் பாதை தெரியாமல் டிரைவர் பள்ளத்தில் விட்டார். டிராக்டர் தலைகுப்புற கவிழ்ந்தது. டிரைவர் உள்ளிட்ட நான்கைந்து பேர், கீழே குதித்து தப்பினர். டிராக்டர் ட்ரெய்லரில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்த விஷால் (14) நிவாஸ் (14) கிஷோர் (14) ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தேவாரம் போலீசார் விரைந்து சென்று சிறுவர்களின் சடலங்களை கைப்பற்றி உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 3 சிறுவர்களும் தேவாரம் அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தனர்.