பைக்கை திருடிய வாலிபருக்கு நேர்ந்த கோர முடிவு: பரபரப்பு தகவல் Road accident bike theft youth dies t
திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூர் அருகே நேற்றிரவு 9 மணியளவில் பைக்கில் வேகமாக சென்ற இளைஞர், ஒரு வளைவில் திரும்பும்போது ஸ்பீட் பிரேக்கரில் மோதினார். இதில் கட்டுப்பாட்டை இழந்து பைக் பறந்து சென்று விழுந்தது. வண்டியை ஓட்டிய இளைஞர் தலையில் பலத்த காயம்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார். திருவள்ளூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் சம்பவ இடத்துக்கு விரைந்தார். பதிவெண்ணை வைத்து விசாரணை நடத்தினார். திருவள்ளூர் கடம்பத்தூரை சேர்ந்த கோபிநாத் (46) என்பவரது வண்டி என்பதை கண்டுபிடித்தார். உங்கள் வண்டியில் வந்த இளைஞர் இறந்து விட்டார்; யாரிடம் வண்டியை கொடுத்தீர்கள் என இன்ஸ்பெக்டர் கேட்டபோது, கோபிநாத் அதிர்ச்சியடைந்தார். நான் வண்டியை வீட்டு முன் நிறுத்தி இருந்தேன்; அரை மணிநேரத்தில் வண்டி காணாமல் போயிருந்தது. கடம்பத்தூர் போலீசில் புகார் செய்ய போய்க் கொண்டிருக்கிறேன் சார் என கூறினார். அதைக் கேட்டதும் போலீசாருக்கும் அதிர்ச்சி. இதனையடுத்து விபத்தில் இறந்த இளைஞரின் அடையாள அட்டையை எடுத்து போலீசார் பார்த்தனர்.