/ தினமலர் டிவி
/ பொது
/ 9 இந்தியர்களை பலி வாங்கிய சவுதி அரேபிய விபத்து Road Accident| Saudi Arabia | Jaishankar
9 இந்தியர்களை பலி வாங்கிய சவுதி அரேபிய விபத்து Road Accident| Saudi Arabia | Jaishankar
சரக்கு வாகனம் மீது மோதிய பஸ் சவுதி அரேபியாவில் உயிரை விட்ட 9 இந்தியர்கள் சவுதி அரேபியாவின் மெக்கா நகரத்துக்கு தெற்கே ஆசிர் மாகாணம் உள்ளது. இங்குள்ள வாடி பின் ஹஷ்பால் என்ற இடத்தில் 26 தொழிலாளர்களுடன் சென்ற பஸ், எதிரே வந்த சரக்கு வாகனம்(Trailer) மீது மோதியது. இந்த விபத்தில் 9 இந்தியர்கள் உள்பட 15 பேர் இறந்தனர். மற்ற ஆறு பேரும் நேபாளம் மற்றும் கானா நாட்டை சேர்ந்தவர்கள். மேலும் 11 பேர் காயம் அடைந்தனர். அவர்களில் 2 பேர் தெலங்கானவைச் சேர்ந்தவர்கள். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.
ஜன 29, 2025