தேசிய ரோல் பால்: 24 மாநில வீரர் விராங்கனைகள் பங்கேற்பு | RollBallChampionship
திருச்சி, தொட்டியத்தில் உள்ள கொங்குநாடு இன்ஜினியரிங் கல்லூரியில் 21வது சீனியர் நேஷனல் ரோல் பால் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறுகிறது. எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர் கல்வியைபோல விளையாட்டுக்கும் முக்கியத்துவம் தர வேண்டும் என்று மாணவ, மாணவிகளுக்கு அட்வைஸ் செய்தார். 25ம் தேதி வரை நடைபெறும் இப்போட்டியில், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, டெல்லி, உத்தரபிரதேசம் உட்பட 24 மாநிலங்களில் இருந்து சுமார் 600 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். breath வெற்றி பெறுபவர்களுக்கு நிறைவு நாளான 25ம் தேதி பரிசுகள் வழங்கப்படும். ரோல் பால் நிறுவனர் ராஜு தபாடே, இந்திய ரோல் பால் கூட்டமைப்பு தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் சுப்ரமணியன், தமிழ்நாடு ரோல்பால் சங்க பொதுச்செயலாளர் கோவிந்தராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.