/ தினமலர் டிவி
/ பொது
/ ரவுடியை பிடிக்க சென்ற போலீசுக்கு அதிர்ச்சி: காவலர்கள் அட்மிட் | Rowdy Attack | Vegetable Vendor
ரவுடியை பிடிக்க சென்ற போலீசுக்கு அதிர்ச்சி: காவலர்கள் அட்மிட் | Rowdy Attack | Vegetable Vendor
கடலூர் மீனாட்சி பேட்டையை சேர்ந்தவர் ரமேஷ். அதே பகுதியில் காய்கறி கடை நடத்தி வருகிறார். காலை ரவுடி சுபாஷ்கர் அங்கே வந்துள்ளான். ரமேஷிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டான். திடீரென மறைத்து வைத்திருந்த கத்தி எடுத்து தாக்கினான். இதில் ரமேஷ் கை, கால், தலையில் வெட்டு விழுந்தது. அங்கேயே சுருண்டு விழுந்த அவர் ரத்த வெள்ளத்தில் துடித்தார். சுற்றி இருந்தவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் ரமேஷை மீட்டு கடலூர் அரசு ஆஸ்பிடலில் சேர்த்தனர். போலீஸ் வருவதற்குள் ரவுடி சுபாஷ்கர் அங்கிருந்து தப்பினான்.
ஜன 16, 2026