ஆர்ம்ஸ்ட்ராங் வழக்கு விசாரணையில் ரவுடி நாகேந்திரன்! Rowdy Nagenthiran | Tamil Nadu Youth Congress |
ஆர்ம்ஸ்ட்ராங் வழக்கு விசாரணையில் ரவுடி நாகேந்திரன்! திமுக, காங்கிரஸ், அதிமுக, பாஜ, உள்ளிட்ட கட்சிகளின் முக்கிய பொறுப்பில் இருந்த பலர் விசாரணை வளையத்தில் சிக்கினர். திருநின்றவூரை சேர்ந்த திமுக வக்கீல் அருள் கொடுத்த தகவலின் பேரில் இளைஞர் காங்கிரஸ் மாநில பொது செயலாளர் அஸ்வத்தாமன் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 3 நாட்களாக அஸ்வத்தாமனிடம் விசாரணை நடத்தி வந்த போலீசார் நேற்று காலை அவரை கைது செய்தனர். சென்னை எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டார். இவருடன் சேர்த்து ஆம்ஸ்ட்ராங் கொலையில் இதுவரை 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலை வழக்கில் கைதான அஸ்வத்தாமன் காங்கிரஸ் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.