உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ரவுடி வரிச்சியூர் செல்வம் திடீர் கைது: நடந்தது என்ன? Rowdy varichiyur selvam arrested dindigul pol

ரவுடி வரிச்சியூர் செல்வம் திடீர் கைது: நடந்தது என்ன? Rowdy varichiyur selvam arrested dindigul pol

மதுரை மாவட்டம் வரிச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் வரிச்சியூர் செல்வம். 1990ம் ஆண்டுகளில் சிறு சிறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டவர், மெதுவாக கட்டப் பஞ்சாயத்தும் செய்ய ஆரம்பித்து பிரபலமானார். பிறகு, ஒரு சில கொலைச் சம்பவங்களை செய்து முடித்து பெரிய ரவுடி ஆனார், வரிச்சியூர் செல்வம். மதுரை மாவட்டத்தையே ஒரு கலக்கு கலக்கினார். இதனால் அவர் மீது குற்ற வழக்குகளுக்கு பஞ்சமில்லை. வரிச்சியூர் செல்வம் பேரை கேட்டாலே கிலோ கணக்கில் நகைகளை அணிந்து கொண்டு செல்லும் காட்சி தான் பலருக்கும் நினைவில் வரும். சில ஆண்டுகளுக்கு முன், போலீசாரின் என்கவுண்ட்டர் லிஸ்ட்டில் வரிச்சியூர் செல்வம் சேர்க்கப்பட்டார். அதன்பிறகு, தனது ரவுடித்தனத்தை எல்லாம் நிறுத்தி விடுவதாக போலீசிடம் கூறி விட்டு, அமைதியாக காலத்தை கழித்து வந்தார். இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் அவரை கோவை போலீசார் கடத்தல் வழக்கில் என்கவுன்டர் செய்யப்போவதாக தகவல்கள் வெளியானதால் அதிர்ந்து போனார். நான் எந்த வம்பு தும்புக்கும் போகலை; என்னை ஏன் என்கவுன்டர் பண்ணப்போறீங்க என பேட்டியளித்து காமெடி செய்தார். 4 மாதங்கள் கழித்து திண்டுக்கல் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவர் எதற்காக கைது செய்யப்பட்டார்? என்ற விவரம் வருமாறு: 2012ஆம் ஆண்டில் ரவுடித்தனத்தில் வரிச்சியூர் செல்வம் உச்சத்தில் இருந்த சமயம். பணத்துக்காக கேரளாவைச் சேர்ந்த ஒருவரை கடத்தினார். திண்டுக்கல் பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு லாட்ஜில் கடத்தப்பட்ட நபரை வரிச்சியூர் செல்வமும் கூட்டாளிகளும் அடைத்து வைத்து குடும்பத்தினரிடம் பணம் கேட்டு மிரட்டிக் கொண்டிருந்தனர். அதை மோப்பம் பிடித்துவிட்ட திண்டுக்கல் போலீசார் ஓட்டலுக்குள் அதிரடியாக நுழைந்தனர். கடத்தப்பட்ட நபரை போலீசார் மீட்க முயன்றபோது இரு தரப்புக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசையே வரிச்சியூர் செல்வமும் கூட்டாளிகளும் தாக்க முயன்றனர். இதனால் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கேரளாவைச் சேர்ந்த நபர் இறந்தார். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வரிச்சியூர் செல்வம் தப்பி ஓடிவிட்டார். பிறகு, இந்த வழக்கில் திண்டுக்கல் போலீசார் வரிச்சியூர் செல்வத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர் சில காலம் சிறையில் இருந்தபின், ஜாமின் பெற்ற வரிச்சியூர் செல்வம், வழக்கு விசாரணைகளின்போது திண்டுக்கல் கோர்ட்டில் ஆஜராகாமல் டிமிக்கி கொடுத்து வந்தார் தொடர்ந்து கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்ததால் வரிச்சூர் செல்வத்துக்கு நீதிபதி கைது வாரண்டு பிறப்பித்தார். இதையடுத்து, திண்டுக்கல் போலீசார் அவரை கைது செய்ய மதுரையிலுள்ள வரிச்சியூருக்கு சென்றனர். ஆனால் அவர் அங்கு இல்லை. வத்தலகுண்டு பகுதியில் ஒரு வீட்டில் பதுங்கியிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. அங்கு செனற போலீசார் வரிச்சியூர் செல்வத்தை சுற்றி வளைத்துப்பிடித்து கைது செய்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். #RowdyVarichiyur #SelvamArrested #DindigulPolice #CrimeNews #KidnapCase #CrimeInvestigation #LawEnforcement #JusticeServed #CriminalActivity #EastDindigul #SafetyFirst #PublicAwareness #LocalNews #CrimeWatch #Arrested #SecurityMatters #PoliceUpdate #Dindigul #NewsAlert #SocialJustice

செப் 19, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ