உக்ரைனில் ரஷ்யா கோர தாண்டவம்-திடுக் வீடியோ | Trump Zelenskyy meet | US vs EU | Russia attack video
அமெரிக்க அதிபர் டிரம்பும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் வெள்ளை மாளிகையில் பகிரங்கமாக மோதியது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஜெலன்ஸ்கியை வெள்ளை மாளிகையில் இருந்து டிரம்ப் வெளியேற்றியதால், ரஷ்யா, உக்ரைன் போர் நிறுத்த பேச்சு பாதியில் முடிந்தது. வெள்ளை மாளிகை விவகாரம் உலக அரசியலையே புரட்டிப்போட்டு விட்டது. இதற்கிடையே அமெரிக்காவை சமரசம் செய்து புதிய போர் நிறுத்த ஒப்பந்தம் கொண்டுவரும் முயற்சியில் ஐரோப்பிய நாடுகள் களமிறங்கி உள்ளன. ஒரு பக்கம் போர் நிறுத்த பேச்சுவார்த்தை தொடர்ந்தாலும் உக்ரைனும் ரஷ்யாவும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக ஒரு வாரமாக உக்ரைனில் புகுந்து ரஷ்யா வெறியாட்டம் நடத்தி வருவதாக ஜெலன்ஸ்கி கூறி உள்ளார். ஒரே வாரத்தில் மட்டும் 1,050 ட்ரோன்கள் மூலம் ரஷ்யா தாக்குதல் நடத்தி உள்ளது. 1,300 குண்டுகளை உக்ரைன் மீது வீசி உள்ளது. 20 பாலிஸ்டிக் ஏவுகணைகளை வைத்து தாக்கி உள்ளது என்று அவர் கூறினார். இது தொடர்பான வீடியோக்களையும் வெளியிட்டுள்ளார்.