வாசகர்கள் கருத்துகள் ( 2 )
ஆயில் வாங்க எங்க கிட்டே வாங்க.
நட்பு நாடான ஈரான் உதை வாங்கும் அதை வேடிக்கை பார்த்துகொண்டிருக்கும் ரஷ்யா நமக்கு உதவ போகிறதா?
ஈரான்-அமெரிக்கா போர்: இந்தியா பக்கம் இறங்கிய ரஷ்யா | Russia Crude Supply | Hormuz Disruption Buffer
வாரே வாவ்! இந்தியாவுக்காக நாங்க இருக்கோம்! போருக்கு இடையே ரஷ்யா அறிவிப்பு ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போர் தொடுத்துள்ளதால், உலகெங்கும் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய கவலை, கச்சா எண்ணெய் வினியோகம் தடைபடுமா என்பதுதான். போருக்கு இடையில், உலக கச்சா எண்ணெய் சரக்கு போக்குவரத்தில், 20 சதவீதம், ஈரானுக்கு அருகில் உள்ள ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே நடக்கிறது. இதை ஈரான் மூடியுள்ளது, எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதாக அமைந்துள்ளது. கச்சா எண்ணெய் வர்த்தகத்தில், பெரும்பாலான ஆசிய நாடுகள் ஹார்முஸ் ஜலசந்தியை பெரிதும் நம்பி உள்ளன. இந்த பாதையை ஈரான் மூடி இருப்பதால் இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகள் பெரும் இழப்பை சந்திக்க நேரிடும். சீனா, இந்தியா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகள் இந்த வழியாக, 75 சதவீத எண்ணெய் போக்குவரத்தை கொண்டுள்ளன. மேலும், 59 சதவீத எல்.என்.ஜி., எனப்படும் திரவ இயற்கை எரிவாயு வர்த்தகத்தை கொண்டுள்ளன. ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் ஜப்பான் பெரிய அளவில் இழப்பை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அடுத்தாக தென்கொரியாவும், மூன்றாவது இடத்தில் இந்தியாவும், நான்காவது இடத்தில் சீனாவும் உள்ளது. இந்தியாவின் சமையல் காஸ் இறக்குமதியில் பெரும்பகுதி இந்த ஜலசந்தி வழியாகவே வருகிறது. இது தடைப்பட்டால், சமையல் காஸ் வினியோகம் கடுமையாக பாதிக்கப்படும். உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு வழிவகுக்கும். பணவீக்கத்தை அதிகரித்து அந்நியச் செலாவணி கையிருப்பில் பாதிப்பு ஏற்படக் கூடும் என சர்வதேச பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு கையிருப்பும் குறைவதால் மாற்று வினியோக வழிகளை தேட வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்திய கடல் எல்லைக்கு அருகே உள்ள தனது கப்பல்கள் வாயிலாக, சில வாரங்களுக்குள் 95 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெயை வழங்க ரஷ்யா முன்வந்துள்ளது. இந்தியாவின் மொத்த கச்சா எண்ணெய் தேவையில் 40 சதவீதம் வரை பூர்த்தி செய்யவும் ரஷ்யா தயாராக உள்ளது. அமெரிக்காவின் அழுத்தத்தால், ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதியை சமீப காலமாக இந்தியா கணிசமாக குறைத்துள்ளது. தற்போதைய நெருக்கடியான சூழலில், ரஷ்ய எண்ணெய் இறக்குமதி மீண்டும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆயில் வாங்க எங்க கிட்டே வாங்க.
நட்பு நாடான ஈரான் உதை வாங்கும் அதை வேடிக்கை பார்த்துகொண்டிருக்கும் ரஷ்யா நமக்கு உதவ போகிறதா?