ரஷ்யாவில் விமான சேவை பாதிப்பு! Russia Ukraine War | Drone Attacks | Moscow
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே இரு ஆண்டுகளுக்கும் மேல் போர் நடக்கிறது. இதில் இரு தரப்பிலும் பலர் பலியாகி உள்ளனர். போரை நிறுத்தும்படி உலக தலைவர்கள் வலியுறுத்தியும், அதை கண்டு கொள்ளாமல், உக்ரைன் மீது ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடின் தாக்குதலை தொடர்ந்து வருகிறார். இந்நிலையில் ரஷ்ய தலைநகர் மாஸ்கோ பிராந்தியத்தை குறிவைத்து, ட்ரோன் எனப்படும் ஆளில்லா சிறிய விமானங்கள் வாயிலாக, உக்ரைன் ராணுவம் நேற்று தாக்குதல் நடத்தியது. 36 ட்ரோன்கள் வாயிலாக நடந்த தாக்குதலில் ஒருவர் காயமடைந்தார்.
நவ 11, 2024