சயீப் அலிகானிடம் கட்டணமே வாங்கவில்லை; உதவியதில் மகிழ்ச்சி | Saif Ali Khan case | Auto Driver Rana
கட்டிப்பிடித்து நன்றி சொன்ன நடிகர் சயீப் அலிகான் ஆட்டோ டிரைவர் நெகிழ்ச்சி! பாலிவுட் நடிகர் சயீப் அலிகான் மும்பையின் பாந்த்ரா பகுதியில் உள்ள அப்பார்ட்மென்ட்டில் குடும்பத்துடன் வசிக்கிறார். கடந்த 16ம் தேதி அதிகாலை அவரது வீட்டுக்குள் திருடன் ஒருவன் புகுந்தான். அவனை பிடிக்க முயன்ற சயீப் அலிகானை, திருடன் 6 முறை கத்தியால் குத்திவிட்டு தப்பினான். படுகாயம் அடைந்த அவரை குடும்பத்தினர் மீட்டு ஆட்டோவில் அருகில் உள்ள லீலாவதி ஆஸ்பிடலில் சேர்த்தனர். தாக்குதல் நடத்திய வங்கதேசத்தை சேர்ந்த முகமது ஷரிபுல் என்பவரை மும்பை போலீசார் ஞாயிறன்று கைது செய்தனர். ஆஸ்பிடலில் சயீப் அலிகான் முதுகு தண்டுவடத்தில் ஆபரேஷன் செய்யப்பட்டது. 5 நாள் சிகிச்சைக்கு பிறகு செவ்வாயன்று டிஸ்சார்ஜ் ஆகினார். அதற்கு முன், தன்னை ஆஸ்பிடலுக்கு அழைத்துச்சென்ற ஆட்டோ டிரைவர் பஜன் சிங் ராணாவை சந்தித்தார். அவரை கட்டிப்பிடித்து நன்றி தெரிவித்தார். சயீப் அலிகானின் தாயார் ஷர்மிளா தாகூர், பஜன்சிங்கிற்கு நன்றி தெரிவித்து ஆசீர்வாதம் வழங்கினார்.