சயீப் அலி கான் சம்பவம் சர்வதேச சதி? பகீர் தகவல் Saif Ali Khan case | Mohammad Shariful Islam Shahzad
சயீப் அலி கான் சம்பவத்தில் பகீர் கைதான ஆசாமி இந்தியன் இல்ல யார் இந்த முகமது ஷரிபுல்? திடுக்கிடும் முழு பின்னணி பிரபல பாலிவுட் நடிகர் சயீப் அலிகான், மும்பை பாந்த்ராவில் உள்ள சத்குரு ஷரண் என்ற அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். 16ம் தேதி அதிகாலையில் அவரது வீட்டுக்குள் புகுந்த கொள்ளையன், சயீப் அலிகானை 6 முறை கொடூரமாக கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடினான். அறுவை சிகிச்சைக்கு பிறகு சயீப் அலி கான் உயிர் தப்பினார். இந்த கொடூர சம்பவம் மும்பை மட்டும் இன்றி, மொத்த சினிமா உலகத்தையும் உலுக்கிப்போட்டது. விஷயம் சீரியஸ் என்பதால் மொத்தம் 35 தனிப்படைகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டன. ஒரு வழியாக 3 நாள் வேட்டைக்கு பிறகு ஆசாமியை தட்டி தூக்கி இருக்கிறது மும்பை போலீஸ். அவனிடம் நடந்த விசாரணையில், அவன் இந்தியனே இல்லை என்ற தகவல் போலீசை திடுக்கிட வைத்துள்ளது. சம்பவத்தன்று இரவில் சயீப் அலிகான் வீட்டில் அப்படி என்ன நடந்தது? கைதான ஆசாமி யார்? எதற்காக நடிகர் வீட்டில் புகுந்தான்? போலீசில் அவன் அளித்த வாக்குமூலம் என்ன? என்பது பற்றி பார்க்கலாம். வியாழன் இரவு ஒன்றரை மணி இருக்கும். சயீப் அலிகான் இளைய மகன் ஜஹாங்கீர் ரூமுக்குள் ஆசாமி நுழைந்தான்.