ஏஆர் ரகுமான் பற்றி சாய்ரா பானு பரபரப்பு ஆடியோ | Saira Banu Audio | AR Rahuman divorce | ARR issue
சாய்ரா பானு பரபரப்பு ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது: நான் இப்போது மும்பையில் இருக்கிறேன். யூடியூபர்ஸ் மற்றும் தமிழ் மீடியா தயவு செய்து ரகுமான் பற்றி அவதூறு பரப்பாதீர்கள். இந்த உலகத்திலேயே மிகவும் சிறந்த மனிதர் ரகுமான். அவரை போன்ற அற்புதமான மனிதரை பார்க்க முடியாது. சில மாதங்களாக எனது உடல்நிலை சரி இல்லை. மும்பையில் தங்கி இருந்து சிகிச்சை பெற்று வருகிறேன். எனவே தான் ரகுமானிடம் இருந்து கொஞ்ச காலம் விலகி இருக்கலாம் என்று விரும்பினேன். ரகுமான் சென்னையில் பிஸியாக இருக்கிறார். அதனால் தான் அவரையும் என் பிள்ளைகளையும் தொந்தரவு செய்ய விரும்பவில்லை. அவர் மீது நான் அளவு கடந்த நம்பிக்கை வைத்திருக்கிறேன். காரணம் அவர் அவ்வளவு நல்ல மனிதர். அவரை மிகவும் நேசிக்கிறேன்.