பதுங்கி திட்டம் போட்டு திமுக நிர்வாகி செய்த சம்பவம் | Salem | Attur Murder | DMK
சேலம் ஆத்தூர் அருகே உள்ள முறப்பங்காடு பகுதியை சேர்ந்தவர் முருகன், வயது 25. இவரது தந்தை அங்கமுத்துவுக்கு சொந்தமான 1 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த திமுக கிளை செயலாளர் சுப்ரமணிக்கும் தகராறு இருந்து வந்துள்ளது. முருகன் நிலத்துக்கு செல்லும் பொதுபாதை தொடர்பாக இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. சுற்றி நிலம் வைத்திருக்கும் 19 விவசாயிகளுக்கு இந்த பொதுபாதை பாத்தியப்பட்டது என கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்குள் அடிக்கடி வாக்குவாதம் உண்டாவது வழக்கமாக இருந்தாலும் முருகன், சுப்ரமணி தொடர்ச்சியாக சண்டையிட்டு வந்துள்ளனர். முருகனை எப்படியாவது தீர்த்துகட்ட வேண்டும் என சுப்ரமணி திட்டம் போட்டார். இன்று காலை தனது மக்காசோள காட்டில் மறைந்து கொண்டார். பொதுபாதை வழியாக முருகன் தனியாக நடந்து வரும் போது திடீரென அரிவாளால் வெட்டினார். கால், தலையில் ஆழமாக வெட்டுகாயம் அடைந்த முருகன் ஸ்பாட்டிலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து இறந்தார். முருகன் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் வருவதுக்குள் சுப்ரமணி தலைமறைவானர். ஆத்தூர் போலீஸ்சார் சம்பவம் குறித்து விசாரிக்கின்றனர்.