உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / உறக்கத்தில் 2 உயிரை எடுத்த கொடூர அப்பன்-பகீர் பின்னணி | Salem case | gangavalli crime case | TN

உறக்கத்தில் 2 உயிரை எடுத்த கொடூர அப்பன்-பகீர் பின்னணி | Salem case | gangavalli crime case | TN

தூக்கத்திலேயே துடிதுடித்த 4 உயிர் மனைவி+3 குழந்தைகளுக்கு வெட்டு சேலத்தை பதற வைத்த கொடூர அப்பன் செயல்! சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் அசோக் குமார். ஆட்டோ டிரைவர். இவரது மனைவி தவமணி வயது 38. தம்பதிக்கு விஜயதாரணி வயது 13, அருள்குமாரி வயது 10, அருள் பிரகாஷ் வயது 5 என 2 மகள், ஒரு மகன். அசோக் குமார், தவமணி இடையே ஏற்கனவே குடும்ப பிரச்னை இருந்தது. உள்ளூரில் உள்ள சொத்து தொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு நடந்ததாக கூறப்படுகிறது. இதனால் சில ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். அசோக் குமார் ஆட்டோ ஓட்டுவதற்காக நெய்வேலிக்கு சென்று விட்டார். இருப்பினும் அவ்வப்போது செல்போனிலும் பேசி சண்டையிட்டு வந்து இருக்கின்றனர். ஒரு கட்டத்தில் மனைவியை கொலை செய்து விட வேண்டும் என்று அசோக் குமார் முடிவு செய்தார். கொலை திட்டத்துடன் நேற்று இரவு நெய்வேலியில் இருந்து சொந்த ஊருக்கு புறப்பட்டார். அதிகாலையில் கிருஷ்ணாபுரம் வீட்டுக்கு வந்தார். அப்போது மனைவியும் 3 குழந்தைகளும் அயர்ந்து தூங்கிக்கொண்ருந்தனர். கொஞ்சம் கூட ஈவு இரக்கம் இன்றி தூங்கிக்கொண்டிருந்த 4 பேரையும் சரமாரியாக வெட்டினார். பெத்த பிள்ளைகள் என்று கூட பார்க்காமல் கண்டம் துண்டமாக வெட்டி சாய்த்தார். சத்தம் கூட போட முடியாமல் சம்பவ இடத்திலேயே 4 பேரும் சரிந்தனர். பின்னர் அங்கிருந்து அசோக் குமார் தப்பி ஓடினார். விடிந்த பிறகும் தவமணி வீட்டில் இருந்து யாரும் வெளியே வரவில்லை. இதனால் பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் சந்தேகத்தில் உள்ளே சென்று பார்த்தனர். தவமணியும் குழந்தைகளும் ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். குழந்தைகள் விஜயதாரணி, அருள் பிரகாஷ் உடலில் உயிர் இல்லை. அதே நேரம் தாய் தவமணி, இன்னொரு மகள் அருள் குமாரி உடலில் அசைவு இருந்தது. அவர்கள் 2 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆபத்தான நிலையில் 2 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இற்கிடையே சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் கொல்லப்பட்ட 2 குழந்தைகள் சடலத்தையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தில் மோப்ப நாய் சோதனை செய்தது. தடய அறிவியல் நிபுணர்களும் தடயங்களை சேகரித்தனர். மனைவி, மகள்கள் என்று கூட பாராமல் ஒரே நேரத்தில் எப்படி 4 பேரை அசோக் குமார் வெட்டி சாய்த்தார் என்பது போலீசாருக்கு அதிர்ச்சியாகவே இருந்தது. ஒருவேளை மது அல்லது கஞ்சா போதையில் இருந்திருக்கலாம் என்று போலீசார் கருதினர். இதற்கிடையே பக்கத்து ஊரில் பதுங்கி இருந்த அசோக் குமாரை போலீசார் கைது செய்தனர். கொடூர கொலைக்கு சொத்து பிரச்னை காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா என்பது பற்றி தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

பிப் 19, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை