மும்மொழி கொள்கை ஆதரவு: சேலம் ஆசிரியரை தூக்கிய போலீஸ் Salem police cyber crime Teacher kamalakan
சேலம் சின்னக்கொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கலியுகக்கண்ணன். இவர் சேலத்தில் உள்ள டுடோரியல் நடத்தி வருகிறார். நீட் பயிற்சியும் அளித்துவருகிறார். கடந்த 6ம் தேதி மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டிருந்தார். வேலை வாய்ப்புக்கான திறனை வளர்த்துக் கொள்ள 10 மொழிகளை கூட கற்றுக் கொள்ளலாம்; தப்பே இல்லை என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறிய கருத்தையும், மத்திய அரசு எவ்வளவு நிதியை அள்ளிக் கொடுத்தாலும் மும்மொழி கொள்கையை ஏற்க மாட்டோம் என முதல்வர் ஸ்டாலின் கூறுவதையும் ஒப்பிட்டு கலியுக கண்ணன் சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்டதாக கூறப்படுகிறது. அவர் முதல்வர் ஸ்டாலின் பற்றி அவதூறான கருத்துக்களை பதிவிட்டதாக, சேலம் மாநகர சைபர் க்ரைம் உதவி ஆய்வாளர் கீதா புகார் அளித்தார். அதனடிப்படையில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் ஆசிரியர் கலியுக கண்ணனை அவரது வீட்டில் வைத்து அதிரடியாக கைது செய்தனர். அப்பாவை போலீசார் இழுத்துச் சென்றதாகவும், செல்போனை பிடுங்கி உடைத்ததாகவும் மகள் குற்றம்சாட்டினார். இதுவா ஜனநாயகம் தமிழகத்தில் சர்வாதிகார ஆட்சியா நடக்கிறது என ஆவேசமாக கேட்டார்.