/ தினமலர் டிவி
/ பொது
/ சமயபுரம் கோயிலில் இடைத்தரகர்கள் குறுக்கீடால் அல்லாடும் பக்தர்கள் | Samayapuram temple | Intermediari
சமயபுரம் கோயிலில் இடைத்தரகர்கள் குறுக்கீடால் அல்லாடும் பக்தர்கள் | Samayapuram temple | Intermediari
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தினமும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். இப்போது சபரிமலை சீசன் என்பதால் ஏராளமான ஐயப்பன் பக்தர்களும் மாரியம்மன் கோயிலுக்கு படையெடுத்து வருகின்றனர். கூட்டம் அதிகமாக இருப்பதை பயன்படுத்தி, கோயிலில் பணிபுரியும் நிர்வாகிகளை கையில் வைத்திருக்கும் ஒரு சில இடைத்தரகர்கள் வசூல் வேட்டையில் இறங்கி உள்ளனர். பக்தர்களை மடக்கி உங்களை நேரடியாக சாமி பார்க்க அழைத்து செல்வதாக கூறி ஆளுக்கு 200 ரூபாய் கேட்டு பேரம் பேசி பணம் கறக்கின்றனர்.
டிச 21, 2024