உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ேகாத உப்புமா: பசி வேதனையில் தூய்மை பணியாளர்கள் | Sanitation Workers | Poor Quality Food

ேகாத உப்புமா: பசி வேதனையில் தூய்மை பணியாளர்கள் | Sanitation Workers | Poor Quality Food

ென்னை மாநகராட்சியில் குப்பை கையாளும் பணி தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, துாய்மை பணியாளர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை சமாதானப்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் துாய்மை பணியாளருக்கு மூன்று வேளை உணவு வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. கடந்த நவம்பர் 15ல், முதல்வர் ஸ்டாலின் திட்டத்தை துவக்கி வைத்தார். அவசர அவசரமாக தொடங்கப்பட்ட திட்டம் என்பதால் முறையாக திட்டமிடப்படவில்லை. பல இடங்களில் சரியான நேரத்திற்கு உணவு வழங்கப்படவில்லை. ஒரு சில நாட்கள் மட்டுமே சுவையான உணவு வழங்கப்பட்டது. இப்போது தரமற்ற முறையில் உணவு வழங்கப்படுகிறது என தூய்மை பணியாளர்கள் குற்றம் சாட்டினர். நீலகிரி மாவட்டம் கூடலூரில் தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட ரவா உப்புமாவில் ரவை அப்படியே வேகாமல் இருந்துள்ளது. வேகாமல் வழங்கப்பட்ட உணவை அவர்கள் சாப்பிட முடியாமல் வீசிவிட்டு சென்றனர். இதுகுறித்து கூடலூர் நகராட்சி ஆணையர் சக்திவேலிடம் கேட்டபோது, தற்போது சோதனை ஓட்டமாக தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. காலை 5 மணிக்கு உணவு தயாரிக்கப்பட்டு 7 மணிக்கு எல்லாம் அது டிபனில் அடைக்கப்பட்டு தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. நீண்ட நேரம் டிபனில் அடைத்து வைக்கப்படுவதால் இதுபோன்று ஏற்பட்டிருக்கலாம். வரும் நாட்களில் இதனை சரி செய்வதற்கான நடவடிக்கை எடுப்போம் என கூறினார். #SanitationWorkers #PoorFoodQuality #UpmaIncident #TamilNaduNews #WorkerProtest #FoodSchemeFail #RavaUpma #LowQualityMeal #SanitaryWorkers #WorkerRights #MunicipalNeglect #BreakfastProtest #IdliUpma #FoodQualityIssue #LabourWelfare

டிச 31, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை