உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நல்ல வேலை தான் ஆனால்... சரப்ஜோத் தயங்குவது ஏன்?

நல்ல வேலை தான் ஆனால்... சரப்ஜோத் தயங்குவது ஏன்?

பாரிசில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு 1 வெள்ளி, 5 வெண்கலம் என 6 பதங்கங்கள் வென்றது. இதில் ஹரியானாவை சேர்ந்த சரப்ஜோத் சிங், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு பிரிவில் மனு பாக்கருடன் சேர்ந்து வெண்கலம் வென்றார். மெடலுடன் சொந்த ஊருக்கு திரும்பிய அவருக்கு, ஹரியானா அரசு வேலை வாய்ப்பு வழங்கியது. 22 வயதே ஆன சரப்ஜோத்துக்கு, விளையாட்டு துறையில் துணை இயக்குநர் பதவி தர முன்வந்தது. ஆனால், அந்த வாய்ப்பை வேண்டாம் என்று சொல்லி விட்டார் சரப்ஜோத். அதற்கான காரணத்தையும் அவர் சொன்னார். அரசு வேலை நன்றாகத்தான் இருக்கிறது. அதை இப்போது செய்ய முடியாது. குடும்பத்தினர் கூட என்னை நல்ல வேலையில் அமர வேண்டும் என்று தான் கூறி வந்தனர்.

ஆக 11, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை